தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து குளிர்வித்து செல்கிறது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

(நாளை)மே 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், வேலூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 17 மற்றும் 18-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.