இந்தியாவில் வங்கு கணக்குகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். அஞ்சல் துறையில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2.25 லட்சம் மட்டுமே வட்டியாக உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டம் முதிர்ச்சியை அடைந்ததும் வட்டி இல்லாமல் முழு அசல் தொகையும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் தற்போதைய நிலவரப்படி 6.9%, 7.0%, 7.1%, 7.5% என வருடத்திற்கு ஏற்றது போல வட்டி உங்களுக்கு கிடைக்கும். இதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி மாற்றம் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்தால் 7.5 சதவீதத்தின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 2.25 லட்சம் வட்டி தொகை கிடைக்கும்.