
தமிழ் சினிமாவில் மருதமலை படத்தில் ஒரு பெண் 4 ஆண்களை திருமணம் செய்து இருப்பார். அவர்கள் நால்வரும் அந்த பெண் எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்று சண்டை போட்டு வடிவேலுவிடம் பஞ்சாயத்துக்கு செல்வார்கள். அப்போது அந்தப் பெண் வடிவேலுவையும் திருமணம் செய்து கொள்வதாக கூறுவார். இதில் சினிமா பார்வையில் பார்க்க காமெடியாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. ஆனால் தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் நிஜத்திலும் நடந்துள்ளது. அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ஒரு பெண் தான் டாக்டர் மற்றும் அரசு ஊழியர் என பலவாறு கூறி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளார். அதாவது சீர்காழியைச் சேர்ந்த நிஷாந்தி என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதலில் திருமணம் செய்துள்ளார்.
அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு மூன்றாம் திருமணம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது 2025 ஆம் ஆண்டில் கடந்த 20ஆம் தேதி சிவச்சந்திரன் என்பவரை நான்காவதாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த பெண்ணின் மூன்றாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நிஷாந்தியை கைது செய்துள்ளனர். அந்தப் பெண் தான் ஒரு அரசு ஊழியர் மற்றும் டாக்டர் என பலவாறு ஏமாற்றி ஆண்களை திருமணம் செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.