தமிழ் சினிமா நடிகர்களும் ஒருவர் காமெடி நடிகர் வடிவேலு. இவர் தன்னுடைய காமெடிகளில் மூலமாக மக்களை சிரிக்க வைத்தார். இதற்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எந்த படத்திலும் சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் வடிவேலுவுடன் நடித்துள்ள பிரபல காமெடி நடிகை பிரியங்கா அளித்துள்ள  பேட்டி ஒன்றில், வடிவேலு குறித்து என்னென்னமோ நிறைய பேர் கூறுகிறார்கள்.

ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை பொறுத்தவரை நான் வடிவேலுவுடன் நடிப்பது எனக்கு சுலபமாக இருந்தது. ஒரே ஒரு கஷ்டமான விஷயம் என்னவென்றால் அவர் நடிக்கும் காட்சிகளில் நடிக்கும் போது சிரிப்பை அடக்கி கொள்ள வேண்டும். இதுதான் மிகப்பெரிய சவாலாக எனக்கு இருக்கும் என்று கூறியுள்ளார். அவரோடு நடிக்கும் பொது சிரிப்பை கண்ட்ரோல் பண்ணி தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.