சேமிப்பின் அடிப்படை என பார்த்தால் ஃபிக்ஸட் டெபாசிட்டு தான் இருக்கும். வங்கிகள் வழங்கக்கூடிய வட்டியானது ஒரே மாதிரியாக உள்ளது. எனினும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி சற்று கூடுதலாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பிரபல வங்கிகளில் எஃப்டி-க்களுக்கு இப்போது வழங்கப்படும் வட்டி வருடத்திற்கு 6.5% -7% வரை இருக்கிறது. அதே நேரம் வங்கி சாரா நிதிநிறுவனங்கள் 8% வரை வட்டி கொடுக்கிறது. பிக்ஸட் டெபாசிட்டு போடும் நேரத்தில் கவனிக்கவேண்டியது, அனைத்து கால அளவிற்கும் ஒரே மாதிரியான வட்டியை கொடுக்க மாட்டார்கள். குறிபிட்ட சில கால அளவுகளுக்கு அதிகளவு வட்டி கொடுப்பதையும் காணலாம்.

ஆகவே பிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடுகையில் ஏனெனென்ன காலஅளவுகள், வாய்ப்புகள் இருக்கிறது, அதற்கு எவ்வளவு வட்டி தருகிறார்கள் என்பதை கவனித்துவிட்டு துவங்க வேண்டும். பிக்ஸட் டெபாசிட்டுகளில் 5 வருட கால லாக்கின் காலத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருவான வரிவிலக்கு உண்டு. அதன்படி, 80 சி கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சத்திற்கு வரி விலக்கு உண்டு. இருப்பினும் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்தவேண்டும். பிக்ஸட் டெபாசிட்டுகள் என்பது சேமிப்பு எனும் அடிப்படையில் தான் வரும். இருப்பினும் இதில் பங்குச் சந்தை சார்ந்த ரிஸ்க் இல்லை, வரி சலுகையும் உண்டு.