இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறியப்படும் எனவும் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் மட்டுமே இருப்பதால் உடனடியாக பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது எப்படி ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பது என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முதலில் வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://incometaxindiaefilling.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று link aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து ontinue to pay through e-pay tax என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் பதிவு செய்தால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விடலாம்.