இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் போனில் லோன் செயலிகள் மூலம் ஏமாறுபவர்கள் பலரும் உள்ளனர். இந்நிலையில் போனில் லோன் செயலிகளின் பயன்பாடுகளை சரிபார்க்க Google app Store அதன் கொள்கையை வலுப்படுத்தி உள்ளது.

லோன் வழங்கும் செயலிகளை ப்ளே ஸ்டோரில் வைத்திருக்க விரும்பினால் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த விதிமுறைகள் மே 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. புதிய கொள்கையின் காரணமாக பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை இனி சேகரிக்க முடியாது.