இந்தியாவில் மக்கள் அனைவரும் வங்கி சார்ந்த சலுகைகளை பெறுவதற்கும் வருமானத்தில் சிறிய பகுதியை சேகரிக்கவும் வங்கி கணக்கு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இதனால் மக்கள் பலரும் வங்கி கணக்கை பயன்படுத்துகின்றனர். பல தேவைகளுக்கு பயன் பெறும் வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை மினிமம் பேலன்ஸ் ஆக நாம் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்ன ஆகும், வங்கிகளில் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுமா என்று இதில் பார்க்கலாம். பொதுவாகவே வங்கிகள் தங்களுடைய சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கின்றன.

இதில் அபராத தொகை ஒவ்வொரு வங்கிகளை பொருத்தும் மாறுபடும். இது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் வங்கிகள் அபராதம் விதிப்பதற்கு உரிமை உண்டு. அதனைப் போலவே வாடிக்கையாளரின் சிரமம், கவனக்குறைவு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிப்பதில் எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ அதே விகிதத்தில் அபராதம் விதிக்க நேரிடும். மேலும் அபராதங்கள் சேமிப்பு கணக்கை எதிர்மறையான நிலைக்கு தள்ளாமல் இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.