
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கும் நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணியினை பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர் அணிகளுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தொடங்குகிறது.
இந்த போட்டியை முன்னிட்டு இன்று காலை 9.45 முதல் டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. இந்த டிக்கெட்டுகள் insider.in மட்டும்தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட், துருவ் ஜூரேல், கேஎல் ராகுல், சர்பராஸ் கான், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.