லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்தில் 3.3 மில்லியன் பார்வையாளர்களை படைத்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் ஏமாற்றிவிட்டார், ட்ரெய்லர் சுவாரஸ்யமாக இல்லை என்று சிலர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் #disappointed என்ற ஹேஷ்டேக் ‘X’ தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.