தமிழ் திரையுலகின் உச்சநடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் கொண்டப்பட்டு வருகிறார். ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமின்றி women centric திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று மாளவிகா மோகனன் கூறியது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாளவிகா மோகனன், நான் நடிகைகளை குறிப்பிட பயன்படுத்தும் ஒரு வார்த்தையை பற்றி தான் குறிப்பிட்டேன். நான் நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன். அவருடைய பயணத்தை வியப்புடன் பார்க்கிறேன். மக்கள் அமைதியாக இருக்கவும் என்று கூறியுள்ளார். இதில் நடிகை மாளவிகா மோகனன், தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..