பிரபல மெடிக்கல் மைக்ரோபயாலஜி பத்திரிக்கையில் சமீபத்திய ஆய்வின்படி வெளியான ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது லிஸ்டரின் மவுத்வாஷை அடிக்கடி பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது Listerine Cool mint அடிக்கடி பயன்படுத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதால் பற்களின் வேர்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் மற்ற நோய்களுக்கு வழி வகுக்கிறது.

இதனை அடிக்கடி பயன்படுத்தி வழக்கமாக மாற்றிவிட்டால் உணவுக் குழல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடிக்கடி பயன்படுத்தினால் வாயில் தொற்று நோய் ஏற்பட்டு முதலில் வீக்கம் ஏற்படும். இதுவே பின்னாளில் புற்றுநோயாக மாற வழி வகுத்து விடும். எனவே இதனை கவனமுடன் மருத்துவர்கள் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏதேனும் வாய்வழிப் பிரச்சனைகள் இருந்தால் அதற்கான சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.