உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் பகுதியில் மயங்க் சாந்தல் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் தன்னுடைய காதலியிடம் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்கள் இருவரும் சிறுவயதில் ஒன்றாக படித்து வந்து நிலையில் பின்னர் காதல் வயப்பட்டு ஒன்றாக இருந்தனர். இந்த நிலையில் அவரின் காதலிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஆனால் மயங்குக்கு வேலை கிடைக்கவில்லை. இதனை அவருடைய காதலி அடிக்கடி சொல்லி காண்பித்ததோடு வேலைக்கு போகாமல் இருப்பதால் திட்டி உள்ளார். இதனால் அவர் மன வேதனையில் நேற்று முன்தினம் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மயங்க் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அறையை சோதனை செய்ததில் அவர் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய காதலி நாள் முழுவதும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து சாப்பிடுவதாக திட்டுவதாக எழுதியுள்ளார். நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டு வீட்டில் சும்மா இருந்து நேரத்தை கழிப்பதாக அவர் திட்டியது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார். அதே சமயத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணத்திற்கு யாரும் பொறுப்பில்லை என்றும் அவர் கூறியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.