இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து இயக்கும் லியோ திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படம் குறித்து கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய பிரபல நடிகரான அர்ஜுன் தாஸ் லியோ திரைப்படம் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் சம்பவமாக இருக்கும் என கூறியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த பலரும் அப்போ அர்ஜுன் தாஸும் படத்தில் இருக்கிறார். லியோ படம் கண்டிப்பாக ஜசியூ தான் என கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.