தமிழில் பிரம்மன், மாயவன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே இவர் நடிகரான வருண் தேஜ்வுடன் காதலில் உள்ளதாக சென்ற சில மாதங்களாக செய்தி பரவி வருகிறது.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் வருகிற ஜூன் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு திருமணம் நடப்பு ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. எனினும் இதுபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பை அவர்கள் வெளியிடவில்லை.