இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஹோலி பண்டிகை வர இருப்பதால் பிப்ரவரி மாதம் ரேஷன் கடைகளில் இரு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மார்ச் 8-ம் தேதி ஹோலிப் பண்டிகை வர இருப்பதால் அதற்கு முன்னதாக இலவச ரேஷன் பொருட்களை இரு முறை பெற்றுக் கொள்ளலாம். கடந்த 20-ம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலத்தில் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலவச அரிசி மற்றும் கோதுமை விநியோகம் வருகிற 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் இதற்குள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமையை பிப்ரவரி மாதத்தில் இரு முறை பெற்று பயன் பெறலாம் என உத்தரப்பிரதேச அறிவித்துள்ளது.