
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். அதன்பிறகு ரேஷன் கார்டுகள் என்பது ஒரு முக்கிய ஆவணமாக திகழும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. அதே சமயத்தில் சிலர் போலி ரேஷன் கார்டுகள் மூலமாக ஏமாற்றுவதால் தகுதியுள்ளவர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போலியான ரேஷன் கார்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மோசடிகளை தடுப்பதற்காக ஆதார் மற்றும் இகேஒய்சி பதிவு மூலம் இந்த நடவடிக்கையை அரசு எடுக்கிறது. அதாவது ஆதார் மற்றும் இ கேஒய்சி பதிவு செய்யும்போது அதில் போலியான ரேஷன் கார்டுகள் தெரியவந்துவிடும். அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதால் இனி பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் சீரான முறையில் விநியோகம் செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.