நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகின்றது. அதே சமயம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருள்கள் 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு தகுதி இல்லாத ரேஷன் கார்டுகளை நீக்கும் நடவடிக்கையை சமீபத்தில் மேற்கொண்ட நிலையில் பலருடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டது. அப்படி உங்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டாலும் கோதுமை மற்றும் தானியங்கள் ஆகியவை கிடைக்கும். அதேசமயம் ரேஷன் கார்டு பட்டியலில் உங்களுடைய பெயர் விரைவில் சேர்க்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு உணவு வழங்கல் துறைக்கு சென்று அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகலை இனைத்து விண்ணப்பித்தால், உங்களுடைய பெயர் மீண்டும் சேர்க்கப்படும்.