நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் இலவச பொருட்களை தவிர்த்து மற்ற அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருள்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கனரக வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

அதன்படி கோதுமை, அரிசி, சர்க்கரையுடன் வெல்லம், நெய், உலர்ந்த பழங்கள், பேக்கிங் செய்யப்பட்ட இனிப்புகள், பால் பவுடர், குழந்தைகளுக்கான உள்ளாடை, சோயாபீன், ஊதுபத்தி, சீப்பு, கண்ணாடி, துடைப்பம், எலக்ட்ரானிக் பொருள்கள், பிளாஸ்டிக் பக்கெட், பாத்ரூம் கிளீனர், குழந்தை சோப்பு மற்றும் பயப்பர்கள் உள்ளிட்ட 35 வகையான பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் விலை குறைவானதாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.