தமிழகத்தில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மட்டுமே வாங்க முடியும் என அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. எனவே முதல் வாரத்திலேயே போய் உங்களது பொருட்களை வாங்கி விடுங்கள் மக்களே.