மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த அரிசியை குறைத்துள்ளது. இதனால் இலவசமாக ரேஷன் கடைகளில் அரிசி வழங்கி வந்த மாநில அரசுகள் சிரமத்தில் இருக்கின்றன. அந்த வகையில் கேரள அரசு ஏற்கனவே வழங்கப்படும் இரண்டு கிலோ அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ அரிசியை 10.90 ரூபாய்க்கு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் நீல அட்டைதாரர்களுக்கு கூடுதல் ரேஷனாக ரூ.10.90 வீதம் 5 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும், AAY கார்டுதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் மண்ணெண்ணெய் உடன் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக அரை லிட்டர் சேர்த்து ஒரு லிட்டராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதம் பத்தாம் தேதிக்குள் அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.