நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மாநில அரசு சார்பாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு கூடுதலாக இலவச சர்க்கரை வழங்குவதாக மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த இலவச சர்க்கரை கிடைக்கும் எனவும் இந்த மாதத்திற்கான இலவச ரேஷன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை 18 ரூபாய்க்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு 21 கிலோ அரிசி மற்றும் 14 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும். சாதாரண வீட்டு அட்டைதாரர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ஐந்து கிலோ இலவசமாக வழங்கப்படும் எனவும் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் மூன்று மாத சர்க்கரை வழங்கப்பட உள்ளதாகவும் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் இதனை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.