மத்திய அரசுடன் இப்போது மாநில அரசும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல வசதிகளை செய்து வருகிறது. அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் கார்டு வைத்திருப்போருக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. மேலும் ஜூன் 2021ம் வருடத்தில் எண்ணெய் விலை அதிகரிப்பால் எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய அரசு, அதற்கு பதில் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.250 வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் மாநில அரசு இந்த 250 ரூபாயை அதிகரிக்க யோசித்து வருகிறது. இத்தொகையை உயர்த்த ஹரியானா அரசு முடிவெடுத்து வருகின்றது. அந்த அடிப்படையில் இனிமேல் 250 ரூபாய்கு பதில் 300 ரூபாய் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. மாநில அரசின் இம்மாற்றத்தின் பலனை வறுமை கோட்டிற்கு கீழே (பிபிஎல்) மற்றும் அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்கள் (ஏஏஒய்) மட்டும் பெறுவர். அதோடு இந்த மாற்றத்தால் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். அதன்படி இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இலவச ரேஷன் வசதியானது 2023-ம் வருடத்திலும் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.