இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றன. கொரோனா காலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ண யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு ஏழை மக்களுக்காக அமல்படுத்தியது.

இந்த திட்டம் தற்போது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 80 கோடி ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி வரை பொதுமக்கள் இவற்றை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலவச ரேஷன் திட்டத்தில் ஒரு கார்டுக்கு மொத்தம் 35 கிலோ உணவு வழங்கப்படும் என்றும் 14 கிலோ கோதுமை மற்றும் 21 கிலோ அரிசி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தகுதி உள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக இரண்டு கிலோ கோதுமை மற்றும் மூன்று கிலோ அரிசி வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.