
பிரதான் மந்திரி சூர்யா கர் இலவச பிஜிலி என்ற திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். ஒரு குடியிருப்பு வீட்டிற்கு சோலார் பேனல்களை நிறுவ திட்டமிட்டிருந்தால்,இந்த திட்டத்தின் கீழ் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் 1 கிலோவாட் வரை 18 ஆயிரம் ரூபாயும், 2 கிலோ வாட் வரை 30 ஆயிரம் ரூபாயும், 3 கிலோவாட் வரை 78 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும். மேலும் இதுகுறித்து தகவல்களை அறிந்துகொள்ள https://pmsuryagharyojana.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.