
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்தார். அதாவது மகாராஷ்டிராவில் நடைபெறும் தேர்தல் செலவுகளுக்காக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் 700 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது மது வணிகர்களிடம் காங்கிரஸ் கட்சி 700 கோடி ரூபாய் வசூலித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பாஜக கட்சி தோல்வி அடைந்ததிலிருந்து இன்னும் அவர்கள் மீண்டு வரவில்லை. பிரதமர் எங்கு சென்றாலும் கர்நாடகாவை பற்றி தான் பேசுகிறார். 700 கோடி ரூபாயை மிரட்டி பெற்றதாக பிரதமர் கூறும் நிலையில் அதனை நிரூபித்தால் நான் இப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராக இருக்கிறேன் என்றார். இதேபோன்று தவறுகளை நிரூபித்தால் எந்த ஒரு தண்டனையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று துணை முதல்வர் டி.கே சிவக்குமாரும் சவால் விட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் கூறும் போது காங்கிரஸ் 700 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கவில்லை 900 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.