இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான jio தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியதாக அறிவித்த நிலையில் கடந்த ஜூலை மூன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஜியோ அதன் 5ஜி வாடிக்கையாளர்களுக்கு 51 மற்றும் 101 ரூபாய் விலைகளில் புதிய பூஸ்டர் பேக் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

அந்தத் திட்டங்களின் படி 51 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம். அதேபோல 101 திட்டத்திலும் வரம்பற்ற 5g டேட்டா கிடைக்கும். ஆனால் 51 ரூபாய் திட்டம் தினமும் 1.50 ஜிபி டேட்டா கொண்ட மாத திட்டம், நூத்தி ஒரு ரூபாய் திட்டம் ஒரு ஜிபி, 1.50 ஜி பி டேட்டா கொண்ட இரண்டு மாத திட்டத்தில் செயல்படும்.