உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் பகுதியில் முகமது ஷபீர் என்ற வாலிபருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில் திருமணத்திற்காக தன்னுடைய குடும்பத்தினருடன் பிஜ்னோர் வந்தார். இந்த திருமணத்தின் ஒரு பகுதியாக செருப்பை மறைத்து வைக்கும் ஒரு சடங்கு செய்யப்பட்டது. அப்போது மணமகளின் தங்கை முகமதுவின் ஷுவை ஒழித்து வைத்துவிட்டு அதை திரும்ப கொடுக்க 50,000 ரூபாய் பணம் கேட்டார்.

ஆனால் முகமது 5000 ரூபாய் தான் பணம் கொடுத்தார். இதனால்  மணமகளின் உறவினர்கள் அவரை பிச்சைக்காரன் என்று கூறினார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. இந்த தகராறில் மணமகனை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து மணமகளின் குடும்பத்தினர் தடியால் அடித்துள்ளனர். இந்த விவகாரம் முற்றிய நிலையில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. பின்னர் அவர்கள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும் ஜூட்டா சுபாய் என்ற காலணிகளை மறைத்து வைக்கும் சடங்கால் ஒரு திருமணத்தில் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.