டெல்லியில் ரூ.500 பணத்திற்காக இளைஞர் ஒருவரை 0கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில், 20 வயதான தில்ஷித் என்பவர் நேற்று மாலை கத்தியால் பலமுறை குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். அதை பார்த்த பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தில்ஷித்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தில்ஷித் இடமிருந்து ரூ.500 பறிக்க முயற்சித்த இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரும், அவரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. தில்ஷித் தன்னை காக்க முயன்றபோது, அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூவரும் சேர்ந்து தில்ஷித்தை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். பின்னர், குற்றத்தில் ஈடுபட்ட அந்த மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.