
இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. இதற்காக google pay மற்றும் phonepe உள்ளிட்ட பல்வேறு யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனைகள் என்பது நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஃபிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்கும் வசதியை google அறிமுகப்படுத்தியுள்ளது. அதோட ஜிபே மூலமாக தங்க நகை கடன் பெரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் நடைபெற்ற கூகுள் பார் இந்தியா நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி தனிநபர் கடனுக்கான உச்சவரம்பு 5 லட்ச ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 50 லட்ச ரூபாய் வரையில் தங்க நகை கடன் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. அதோடு தங்களுடைய செயற்கை நுண்ணறிவு ஜெமினி அம்சத்தையும் google இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தங்க நகை கடன் வழங்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் google pay வாலட்டில் அடுத்த வருடம் முதல் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.