
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜபலா மேரி நர்சிங் படித்துள்ளார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த நித்தின் ராஜ் என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடைசியில் சம்மதம் கூறினார்.
இதனால் கடந்த ஜனவரி மாதம் நிதின் ராஜுக்கும் மேரிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவரும் கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்தனர். இந்நாளையில் சரியாக வேலைக்கு செல்லாத நிதின் ராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் மேரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மேரியின் தாய் புஷ்பலதா கூறும்போது, திருமணம் செய்து வைத்ததிலிருந்து நித்தின் ராஜ் எனது மகளை டார்ச்சர் செய்தார். மகள் வேலைக்கு சென்று வர வேண்டும் என்பதால் வாகனம் வாங்கி கொடுத்தேன்.
50 பவுன் தங்க நகை, 50 லட்சத்தில் சொந்த வீடு, ஆறு லட்ச ரூபாய் ரொக்கம், பைக் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தேன். மீண்டும் அவர்கள் பணம் கேட்டதால் எனது தாலியை அடகு வைத்து ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தேன். நிதின் ராஜன் அக்கா எனது மகளை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
தினமும் மாமனார் 500 ரூபாய் கேட்டுள்ளார். கொடுக்காத போது அவரும் என் மகளை அடித்துள்ளார். எனது மகளின் கழுத்தில் கயிற்றால் இருக்கிறது போன்ற தடம் உள்ளது. எனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புஷ்பலதா கூறியுள்ளார்.