
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு சமீபத்தில் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் வந்தது. ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானை கொலை செய்து விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டல் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் மும்பை காவல்துறையினருக்கு ரூ. 5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அதோடு தற்போது சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் பாடலின் பாடல் ஆசிரியருக்கும் கொலை மிரட்டல் வந்தது. இந்த விவகாரத்தில் போன் நம்பரை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த போன் நம்பர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் நாராயணன் என்பவருடையது தெரிய வந்தது.
ஆனால் அவருடைய செல்போனில் இன்டர்நெட் வசதி இல்லை. பின்னர் இது குறித்து விசாரித்த போது மார்க்கெட்டில் வைத்து ஒருவர் தன் போனை வாங்கி பயன்படுத்தியதாக அவர் கூறினார். அதாவது சோகைல் பாஷா என்பவர் அவரின் போனை வாங்கி ஓடிபி நம்பர் பெற்று தன்னுடைய செல்போன் மூலம் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரித்த போது அந்த சோஹைல் பாஷா சிக்கந்தர் படத்தின் பாடல் ஆசிரியர் என்பது தெரிய வந்தது. இவர் அந்த படத்தில் மெயின் சிக்கந்தர் ஹூன் என்ற பாடலை எழுதியுள்ளார். அதாவது தன்னுடைய பாடல் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சல்மான் கானுக்கும் தனக்கும் அவரே கொலை மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்தது. மேலும் தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.