இந்தியா தற்போது 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5g சேவைகளை வழங்க தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் 5g சேவைகளை வழங்கி வரும் நிலையில் மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் பல ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

அதன்படி பிஎஸ்என்எல் 3ஜி சேவைகளை மட்டுமே வழங்கி வரும் நிலையில் 300 ரூபாய் க்குள் மிகவும் அதிக பலன்களை கொண்ட இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை தற்போது வழங்கியுள்ளது. அதன்படி 249 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழங்குகிறது. மேலும் 299 ரூபாய் திட்டத்தில் 20 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்களுக்கான பலன்களையும் வழங்குகின்றது. குறிப்பிட்டப்பட்டுள்ள டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு இணையவேகம் ஒரு எம்பிபிஎஸ் ஆக குறைந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.