கடந்த வாரங்களில் 500 ரூபாய்க்கு ஒரு கிலோ பூண்டு விற்பனையான நிலையில் பூண்டு விலை தற்போது 300 ரூபாய் குறைந்து 200 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. வட மாநிலங்களில் பூண்டு சாகுபடி பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் விலை வெகுவாக உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் வட மாநிலங்களில் பூண்டு மறு நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடை தொடங்கியுள்ளது . இதனால் விலை வெகுவாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.