
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்தன. இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பல மலிவு பிரிபெய்டு திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி 199 ரூபாய் திட்டத்திற்கு 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினமும் 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். 153 ரூபாய்க்கு 26 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 26 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் கிடைக்கும், 118 ரூபாய் திட்டத்திற்கு 20 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 10 ஜிபி டேட்டா மற்றும் 100 sms ஆகியவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது