
நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுவிதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் ஜியோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஜியோ பாரத் J1 4G செல்போன் 1799 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ஜியோ Money UPI பேமெண்ட் வசதி மற்றும் ஜியோ டிவியை நேரலையாக பார்க்கும் வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. 2.8 இன்ச் டிஸ்ப்ளே உடன் 23 இந்திய மொழிகளுடன் இந்த போன் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதனை அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோமார்ட் போன்ற ஆன்லைன் சந்தைகளில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.