தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின். இவர் தமிழில் போக்கிரி, சிவகாசி, கஜினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதேபோன்று தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆரின் என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகை அசினின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை அசினின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1300 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.