தமிழகத்தில் மகளிருக்கான 1000 ரூபாய் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாக பெறப்பட்ட நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் நாளை முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணியானது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்களை நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள்.

இந்த ஆய்வு அடிப்படையில் ஏதேனும் தவறு அல்லது சந்தேகப்படும்படியாக இருந்தால் அதிகாரிகள் வீட்டிற்கு ஆய்வு மேற்கொள்ள வருவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அதன் பிறகு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியான குடும்ப தலைவிகளின் இறுதிப் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது