இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் பயனர்களுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீடு ஆகும். அதேபோல அஞ்சல் துறை சார்பாக பல்வேறு திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டாடா ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆண்டுக்கு 399 & 396 பிரீமியங்களில் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில் 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள அட்டை போன்ற எந்தவித சான்றுகளும் இன்றி டிஜிட்டல் முறையில் 5 நிமிடங்களில் இந்த பாலிசி வழங்கப்படும்.