இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் சுய தொழில் தொடங்கும் பெண்களுக்காக அரசு சார்பில் குறைந்த வட்டியில் கடன் உதவியும் மானியத்தில் கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலமாக பத்து லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் கணக்கு வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் இந்த கடனை வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த கடனுக்காக வங்கிகளை அணுகலாம் எனவும் முழுமையான விவரங்களுக்கு https://www.standupmitra.in/என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.