
பெங்களூருவில் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா இளம் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம் 120 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலான அணிகள் வீராங்கனைகளை தக்க வைத்துள்ளதால் 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2.5 கோடி ரூபாய், குஜராத் அணி 4.4 கோடி ரூபாய், மும்பை இந்தியன்ஸ் அணி 2.65 கோடி ரூபாய், உ.பி வாரியர்ஸ் அணி 3.9 கோடி ரூபாய், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3.25 கோடி ரூபாய் இருப்பு வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான ஜி கமிலினியை மும்பை கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ளது. இவரை வாங்குவதற்கு மும்பைக்கும் டெல்லிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இவருடைய ஏலத்தொகை 10 லட்ச ரூபாயாக இருந்த நிலையில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியதால் ஏலத்தொகை உயர்ந்து இறுதியாக 1.6 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் தட்டி தூக்கியது. மேலும் இவர் U19 மகளிர் டி20 போட்டியில் மொத்தம் 311 ரன்கள் எடுத்து தமிழக அணியை வெற்றி பெற செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.