
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் மக்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். இதனால் மற்ற மாநில அரசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் கேரளா மாநில அரசுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 10 கோடி ரூபாயை வயநாட்டு நிலச்சரியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரள அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் சினிமா பிரபலங்களான குஷ்பூ, பிரபாஸ், மீனா, சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வயநாட்டின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.