இந்தியாவில் மத்திய அரசு மக்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி தெரு வியாபாரிகள் ஆத்மா நிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் கடன் நிதி 24 மணி நேரத்திற்குள் கணக்கில் வந்து சேரும். குறிப்பாக தெருவோர வியாபாரிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். விருப்பமுள்ளவர்கள் https://pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கடனை செலுத்திய பிறகு நீங்கள் இரட்டிப்பு தொகையுடன் மற்றொரு கடனை பெற முடியும்.