மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட நிராமயா மருத்துவ காப்பீடு திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பி செலுத்துதலின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மருத்துவ செலவுக்காக வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவான மற்றும் மலிவு சுகாதார காப்பீட்டை வழங்குவது தான். இதன் மூலம் இவர்களுடைய வழக்கமான பரிசோதனைகள் மற்றும் மருத்துவமனையில் சேர்த்தல் என சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படும். இதில் இணைய விருப்பமுள்ளவர்கள் 1999 ஆம் ஆண்டின் தேசிய அறக்கட்டளை சட்டப்படி தகுந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதில் இணைய வயது வரம்பு என எதுவும் கிடையாது.

இந்த காப்பீட்டில் இணைய விரும்பும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடல் நலக் காப்பீட்டு திட்ட பதிவு மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஊனமுற்ற சான்றிதழ், இருப்பிடச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட பல ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு ஹெல்த் ஐடி நம்பர் அல்லது கார்டு ஒன்று வழங்கப்படும். இதனைப் பயனர்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.