
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றுள்ளது. விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பர்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்த பேரணி புத்தன் சந்தை, கழுவன் திட்டை வழியாக குழித்துறைக்கு புறப்பட்டது.
அப்போது எம்.எல் ஏ தாரகை ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டியுள்ளார். குழித்துறை பகுதியில் பேரணி வந்த போது போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஒட்டியதற்காக எம்எல்ஏ தாரகைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தாரகை உள்பட 11 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.