
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வீடியோக்கள் எடுக்கிறார்கள். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இருப்பினும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் இது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபட தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
அதாவது வாலிபர் ஒருவர் இணையதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்து கிடக்கிறார். அந்த சமயத்தில் ரயில் அங்கிருந்து சென்றது. அந்த ரயில் சென்று முடித்த பிறகு வாலிபர் தண்டவாளத்தில் இருந்து எழுந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/DGNqC_ISBX3/?igsh=MXZvbG12cnZtNGFkdA==