ரிசர்வ் வங்கியில் பொது, பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சி கொள்கை, புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை துறைகளில் காலியாக உள்ள 94 Grade B நிலை பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை பட்டப்படிப்புடன் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் rbi.org.in என்ற இணையதளத்தில் ஜூலை 25 முதல் ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் பொது மற்றும் OBC பிரிவினர் 850 ரூபாய், SC, ST, PWD பிரிவினர் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.