
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் கடற்கரை ஓரம் இருக்கும் பவளப்பாறைகள், கடற்கரை ஓரங்களில் வசிக்கக்கூடிய கடல்வாழ் உயிரினங்களான நட்சத்திர மீன், சிப்பி, சங்கு உள்ளிட்டவை வெளியே தெரிந்தது.
இது வழக்கமான ஒன்று என்றாலும் தனுஷ்கோடி, பாம்பன், சேரன் கோட்டை உள்ளிட்ட வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கடல் சற்று சீற்றமாக காணப்படுகிறது. மேலும் அக்னி தீர்த்தம் கடல் உள்வாங்கியதால் இது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.