
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் கலந்துகொள்ள பல விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே, மிதாலி ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளவில்லை. மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் தோனி கலந்து கொள்வதில்லை என்பது தெரிந்ததே. இந்நிலையில் தோனி தொடர்ந்து டென்னிஸ் விளையாடி வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.