உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு 1265 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட லட்டை, ஹைதராபாத்தை சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர் காணிக்கையாக செலுத்த உள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், நாடு முழுவதும் பலர் நன்கொடையை அளித்து வருகின்றனர். இதற்காக தயாரிக்கப்பட்ட லட்டு, குளிர்பதன பெட்டியில் வைத்து சாலை மார்க்கமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.